பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
Published on

கணபதி

கோவை கணபதியை அடுத்துள்ள சங்கனூர் ரோட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது42). பழைய இரும்பு வியாபாரி. இவர் தனது மனைவியுடன் ரத்தினபுரி ஜீவானந்தம் ரோடு 7-வது வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், அமர்ந்திருந்த செந்தில்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த நகையினை பறிக்க முயன்றனர். நகைகளை அந்த பெண் கெட்டியாக விடாமல் பிடித்துக் கொண்டதால் அந்த நபர்களால் நகையினை பறிக்க முடியவில்லை.

உடனடியாக முயற்சியினை கைவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.

உடனடியாக இதுகுறித்து ரத்தினபுரி போலீசாரிடம் செந்தில்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com