மாவட்டத்தில் குழந்தை உள்பட 22 பேர் கொரோனாவால் பாதிப்பு

மாவட்டத்தில் குழந்தை உள்பட புதிதாக 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் குழந்தை உள்பட 22 பேர் கொரோனாவால் பாதிப்பு
Published on

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பசுபதிபாளையத்தை சேர்ந்த 36 மற்றும் 38 வயதுடைய 2 ஆண்கள், டி.என்.பி.எல்.காலனியை சேர்ந்த 12 வயது சிறுமி மற்றும் 17 வயது சிறுவன், கருப்பண்ணசாமி நகரைச் சேர்ந்த 84 வயது மற்றும் 65 வயது மூதாட்டி, 56 வயதுடைய ஆண், பள்ளபட்டியை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் 65 வயது முதியவர்.

தாந்தோன்றிமலையை சேர்ந்த 50 வயது ஆண், திருமாநிலையூரை சேர்ந்த 41 வயது ஆண், சனப்பிரட்டியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 35 வயது பெண், லாலாப்பேட்டையை சேர்ந்த 40 வயது பெண், காந்தி கிராமத்தை சேர்ந்த 49 வயது பெண், மொரப்பூர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 68 வயது முதியவர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், அண்ணா வளைவை சேர்ந்த 26 வயது பெண், அரவக்குறிச்சியை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் ஆவர்.

அவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 61 பேர் கரூர் பழைய தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com