பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேர் கைது

வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேர் கைது
Published on

அரியலூர்,

அரியலூர் அருகே உள்ள மண்டையன்குறிச்சியை சேர்ந்த சுந்தரராசு மனைவி வேம்பு(வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் வேம்பு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா உசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com