கஞ்சா, மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் கஞ்சா, மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா, மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
Published on

தேனி :

தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் போலீசார் 8-வது வார்டு காந்திகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி காருண்யா (வயது 28) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.16 ஆயிரத்து 610-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் கீழக் கூடலூர் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com