

திசையன்விளை:
உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், முருகன் மற்றும் போலீசார் நேற்று குட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும், தடைசெய்யப்பட்ட புகையிலையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சூசை நகர் சதீஷ் ராஜா (வயது 38), அமலிநகர் பங்களா தெரு பிரசாந் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், புகையிலை மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.