வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனா.
வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
Published on

மயிலம்,

மயிலம் அருகே உள்ள கீழ்எடையாளம் புதுகாலனியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் விஜி(வயது 29). இவருடைய மனைவி சுமித்ரா(26). இவர்களுக்கு கமலேஷ (6) என்ற மகனும், செந்தமிழ்(4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த விஜி பகவதி அம்மன் கோவில் எதிரே உள்ள வேப்பமரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்டாலின்(31). தொழிலாளியான இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com