ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 2 பேர் சென்னையில் பதுங்கல்; போலீசார் விரைந்தனர்

சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்த பிரபல ரவுடி கொளஞ்சிநாதன், கடந்த 20–ந் தேதி ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.
ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 2 பேர் சென்னையில் பதுங்கல்; போலீசார் விரைந்தனர்
Published on

புதுச்சேரி,

சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 48). பிரபல ரவுடி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் குடும்பத்தினருடன் வந்தார். இவர் கடந்த 20ந் தேதி அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த சேவற்கொடி (30), பரமசிவம் (25), சேகர் (26), கண்ணன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாகி உள்ள சிவகங்கையை சேர்ந்த மணி (29), அழகர் ஆகியோரை பிடிக்க தனிப்படை போலீசார் சிவகங்கையில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மணி, அழகர் ஆகியோர் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com