கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனைகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனைகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனைகள்
Published on

தளி,

உடுமலை பகுதி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

அன்பின் பேரூற்றை தன் கருணையினால் வெளிக்கொணர்ந்த இயேசு பெருமான் பிறந்தநாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.

உலகிற்கு ஒளியாய் வாழ்க்கைக்கு வழியாய் உண்மைக்கு சான்றாய் இன்றளவும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு பெருமான் பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

விழாவை வரவேற்கும் விதமாக வீட்டையும் கிறிஸ்துமஸ் மரத்தையும் மின் விளக்குகளால் அலங்கரித்து நட்சத்திர விளக்குகளை வீட்டின் முகப்பில் தொங்கவிட்டும் குடில்கள் அமைத்தும் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் பரிமாறியும், சிறப்பு விருந்துகள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிமாறியும் கிறிஸ்துவ ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்றும் கொண்டாடினர்.

சிறப்பு ஆராதனை

அந்தவகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உடுமலை பகுதியில் தளி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயம், அற்புத அன்னை ஆலயம், பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், வி.வி.லே அவுட்டில் உள்ள புனித செபஸ்தியர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய இந்த விழாவானது நேற்று காலையில் சிறப்பு ஆராதனையுடன் நிறைவடைந்தது.

இதில் அனைவரும் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது இயேசுகிறிஸ்துவின் பாடல்களை பாடியும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் விழாவை கொண்டாடினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com