உடுமலையில், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

Published on

உடுமலை

உடுமலையில், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

உழவர்சந்தை

உடுமலை மத்திய பஸ்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு நேற்று உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் 65 பேர் தங்களது விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 22 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த காய்கறிகளை பொதுமக்கள் சுமார் 2,500 பேர் வாங்கி பயனடைந்தனர். நேற்று முன்தினத்தைவிட நேற்று உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 பேர் குறைவாக இருந்தது. அதேபோன்று காய்கறிகளை வாங்குவதற்கு வந்திருந்த பொதுமக்களின் எண்ணிக்கையும் நேற்று முன்தினத்தைவிட நேற்று குறைவாக இருந்தது.

உடுமலை ராஜேந்திரா சாலையில் நேற்று காலையில் மளிகைகடைகள், காய்கறிகடைகள், பழக்கடைகள், இறைச்சிக்கடைகள் ஆகிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இதேபோன்று காலையில் பழனிசாலை, பொள்ளாச்சி சாலை, பை-பாஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள மளிகைக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

போலீசார் எச்சரிக்கை

இந்த நிலையில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கள் ரவி, ஆனந்தகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், நெடுஞ்சாலை ரோந்துபணி போலீசார் ஆகியோர் வாகனங்களில் ஒவ்வொரு பகுதியாக ரோந்து சென்று முககவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படியும் வலியுறுத்தினர்.

அப்போது போலீசார் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். மருத்துவமனை, மருந்து கடைகள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம். மளிகைகடைகள், காய்கறிகடைகளுக்கு வருகின்ற பொதுமக்கள், அவற்றை வாங்கியதும் உடனடியாக வீட்டிற்கு செல்லவேண்டும்.

பொதுமக்கள் அவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவசியமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றக்கூடாது.

கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலை தடுப்பதற்காக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பைத்தரவேண்டும். அவ்வாறு அரசின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com