

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 557 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று சுகாதாரத்துறை துனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்டசுகாதாரத்துறை துனை இயக்குனர் ராம்கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 14 லட்சத்து 20ஆயிரத்து 437 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 557 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 90 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 467 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பயனாளிகளுக்கு செலுத்த கோவிஷூல்டு தடுபடபூசி 96 ஆயிரம், கோவாக்சின் தடுப்பூசி 34 ஆயிரம் மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.
ஏற்பாடு
எனவே கொரோனா தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபாகளும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது அவசியம். எனவே, இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.