பட்டா மாறுதலுக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

தெற்கு பொய்கை நல்லூர் வி.ஏ.ஓ. பட்டா மாறுதலுக்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
பட்டா மாறுதலுக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
Published on

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் தம்பியப்பன்.

இவர் தெற்கு பொய்கை நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) சபரிநாதனை சந்தித்து பட்டா மாறுதல் குறித்து விவரம் கேட்டுள்ளார்.

அப்போது பட்டா மாறுதலுக்காக வி.ஏ.ஓ. சபரிநாதன் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை வி.ஏ.ஓ. சபரிநாதனிடம் தம்பியப்பன் கொடுத்தபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சபரிநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com