காஞ்சீபுரத்தில் வாகனம் மோதி ஒருவர் பலி

காஞ்சீபுரத்தில் வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரத்தில் வாகனம் மோதி ஒருவர் பலி
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து காஞ்சீபுரம் டவுன்-1 கிராம நிர்வாக அலுவலர் தென்னரசு பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com