வாகனம் மோதி விவசாயி பலி

பணகுடி அருகே வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
வாகனம் மோதி விவசாயி பலி
Published on

பணகுடி:

காவல்கிணறு திலகர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58), விவசாயி. இவர் நேற்று காலை நெல்லை& கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் லெப்பை குடியிருப்பு பிரிவு பகுதியில் ரோட்டை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் வந்தனர். அவரது உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com