வேலூர்; காதலர் தின வாழ்த்து அட்டையை எரித்த இந்து முன்னணியினர்

வேலூரில், காதலர் தின வாழ்த்து அட்டையை எரித்து இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலூர்; காதலர் தின வாழ்த்து அட்டையை எரித்த இந்து முன்னணியினர்
Published on

வேலூர்

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காதலர்கள் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடிய வேளையில், அதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலூர் நகர இந்து முன்னணி சார்பில் தோட்டப்பாளையத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் தின வாழ்த்து அட்டையை தீ வைத்து எரித்தனர்.

மேலும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பினர் கூறுகையில், காதலர் தினம் தமிழ் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல. அது, அன்னிய கலாசாரமாகும்.

காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அறுவறுக்கத்தக்க வகையில் காதலர்கள் நடக்கிறார்கள்.

இது சமுதாய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. அதனால் தான் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com