குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தளவாய்புரம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
Published on

தளவாய்புரம்,

தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் இருந்து சேத்தூர் பேரூராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் முகவூர், முத்துசாமிபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் குடிநீர் வீணாக ஓடுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com