குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தளவாய்புரம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
Published on

தளவாய்புரம்,

தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் இருந்து முகவூர் வழியே சேத்தூருக்கு தாமிரபரணி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் முகவூர் செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் இந்த குழாய் உடைப்பால் தினமும் குடிநீர் வீணாக சாலையோரம் ஓடுகிறது. எனவே தண்ணீர் சாலையில் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com