திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பி கைது

குமுளியில், திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பி கைது
Published on

குமுளி,

குமுளியை அடுத்துள்ள கொல்லம்பட்டா பகுதியை சேர்ந்தவர் சயின் (வயது 23). இவர் குமுளியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த இளம்பெண்ணை சயின் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது அண்ணன் சினோவின் ஆசைக்கும் காதலியை விருந்தாக்கி உள்ளார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண், சயினிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண், இதுகுறித்து குமுளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சயின், சினோவை கைது செய்தனர்.

பின்னர் 2 பேரும், பீர்மேடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com