கணவரை கொன்று தூக்கில் தொங்க விட்ட மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை: தானே கோர்ட்டு தீர்ப்பு

கணவரை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தானே,

தானேயை அடுத்த கல்வாவை சேர்ந்தவர் பகதூர் யூசுப் கான்(வயது30). இவரது மனைவி ருக்கியா கான் (29). இவர் மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பகதூர் யூசுப்கான் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இதில் ருக்கியா கான் மதுபான பாரில் வேலை பார்த்து வந்தது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகதூர் யூசுப் கான் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ருக்கியா கானிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் ருக்கியா கானின் கள்ளக்காதலனான அஸ்ரப் சேக் (35) மற்றும் தன்ராஜ் சவான் (23) ஆகியோர் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் மேலும் 2 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் ருக்கியா கான், கள்ளக்காதலன் அஸ்ரப் சேக் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து நேற்று அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

கூட்டாளி தன்ராஜ் சவான் மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com