கூடுவாஞ்சேரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன.
கூடுவாஞ்சேரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் அம்பேத்கர் நகர் பகுதி அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதை கண்ட தெரு நாய்கள், அந்த புள்ளி மானை துரத்திச்சென்று கடித்து குதறின. அப்போது அங்கிருந்த வினோத் என்ற வாலிபர் நாய்களிடம் இருந்து புள்ளி மானை காப்பாற்றி, அதன் கால்களை கட்டி தனது வீட்டின் அருகே வைத்து இருந்தார்.

பின்னர் இதுபற்றி தாம்பரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனக்காவலர் சம்பத் அங்கு சென்று மீட்கப்பட்ட புள்ளி மானை கைப்பற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தார். நாய்கள் கடித்ததால் லேசான காயம் அடைந்த மானுக்கு, மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com