

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 24). கார் டிரைவர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுமித்ராவிற்கும் (20) கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சித்தார்த் (2) என்ற ஆண் குழந்தை உள்ளான்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சுமித்ரா, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
சாவு
இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.