விஷம் குடித்து பெண் தற்கொலை

திருக்கோவிலூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சுகந்தா(வயது 58). கடந்த 6 மாத காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சர்க்கரை நோய் வந்ததால் விரல்களை வெட்டி எடுத்து விடுவார்கள் என யாரோ மர்மநபர்கள் சுகந்தாவை பயமுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து விஷம் குடித்த அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com