திருவண்ணாமலையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

திருவண்ணாமலையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
Published on

திருவண்ணாமலை,

செங்கம் தாலுகா மேல்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், நேற்று தனது சகோதரி செல்வி (வயது 46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரிய கோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வி லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இளங்கோவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com