படப்பை அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு

படப்பை அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
படப்பை அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
Published on

உறவினர் வீட்டில் இருந்து மின்சாரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள குத்தனூர் மாணிக்கம்மாள் தெருவை சேர்ந்தவர் கிரிராஜ். எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (வயது 23).

இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு மின் இணைப்பு வசதி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் பெற்று கடந்த 2 மாதங்களாக பயன்படுத்தி வந்தார். இந்த மின்சார வயர் கம்பிவலை வழியாக சென்றுள்ளது.

சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நாய் மின்சாரம் தாக்கி இறந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ கம்பி வலையை தொடும்போது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜெயஸ்ரீயை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்த ஜெயஸ்ரீக்கு 2 வயதில் வர்ஷித் என்ற மகன் உள்ளார். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com