மத்திகிரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

மத்திகிரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள தொப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 34). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ரோஜா (28). சம்பவத்தன்று இவர் பெட்டிக்கடையை திறந்து அங்கிருந்த மின் சுவிட்சை ஆன் செய்தார்.

அந்த நேரம் அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com