சொத்து தகராறில் சிறுமியை கடத்திய பெண்கள் கைது

சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 35). இவர், தனது 12 வயது மகளை உறவுக்கார பெண் கடத்திச் சென்றுவிட்டதாக நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
சொத்து தகராறில் சிறுமியை கடத்திய பெண்கள் கைது
Published on

அதில், அவரது உறவினரான கவுசல்யா என்பவர் சிறுமியை திருவெறும்பூர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் கவுசல்யாவையும் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். புவனேஸ்வரிக்கும், கவுசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரியின் மகளை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து கவுசல்யா மற்றும் அவருக்கு உதவிய சிறுமியின் சித்தி தேவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com