ஏரிக்கரையில் தொழிலாளி பிணம்

ஏரிக்கரையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
ஏரிக்கரையில் தொழிலாளி பிணம்
Published on

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் உட்கோட்டையில் உள்ள ஏரியில் தாமரைப்பூ பறிக்க செல்வதாக பிரபு வீட்டில் கூறிச்சென்றார். இந்நிலையில் ஏரிக்கரையில் அவர் இறந்து கிடப்பதாக அவரது மனைவி தமிழரசிக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, பிரபுவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தமிழரசி கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com