கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே ராயப்பநாடானூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் தோட்டத்தில் சாப்பிட்டு விட்டு, கிணற்றின் அருகில் கை கழுவ சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கணேசனின் உடலை மீட்டனர். பாவூர்சத்திரம் போலீசார், கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com