மரம் விழுந்து கூலி தொழிலாளி பலி

மரம் விழுந்து கூலி தொழிலாளி பலியானார்.
மரம் விழுந்து கூலி தொழிலாளி பலி
Published on

வடகாடு, மே.13-
வடகாடு அருகே உள்ள மாங்காடு வாணியத்தெருவை சேர்ந்தவர் ராமையா (வயது 55). மரம் வெட்டும் கூலி தொழிலாளியான இவர் தடியமனை பகுதியில் மரம் வெட்டும் பணிக்கு சென்று இருந்தார். அப்போது மரம் வெட்டிக்காண்டு இருக்கும்போது, வெட்டப்பட்ட மரம் ராமையா தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com