மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

பழனி அருகே கட்டிட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியாகினார்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
Published on

பழனி:

பழனி அருகே கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த மாதம் 10-ந்தேதி பழனி புதுநகரில் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின்வயர் அவர் மீது உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். உடனே சக தெழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சந்திரகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com