மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே குமாரகிரி கிராமத்தைச் சேர்ந்த செங்கலமுடையார் மகன் காளிமுத்து (வயது 55). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குமாரகிரி கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாற்கரச் சாலையில் சென்று கொண்டிருந்தார். வடக்கு இலந்தைகுளம் விலக்கு அருகே வரும்போது சாலைத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்து போனார். காளிமுத்துக்கு வெற்றிச்செல்வி, பொன்னுத்தாய் என்ற இரண்டு மனைவிகளும் செந்தில், தமிழரசன், முத்தமிழ்ச் செல்வன், பொன்ராஜ், பாலமுருகன், ஆகிய 6 மகன்களும் உள்ளனர், இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com