

நாங்குநேரி:
நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 70), கூலி தொழிலாளி. இவர் நேற்று சிறுமளஞ்சியில் இருந்து நாங்குநேரிக்கு நம்பியாற்று பழைய பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பெரும்படையார் சாஸ்தா கோவில் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அருகில் வந்தபோது நெல்லை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியம் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அப்போது அங்கு சாலையோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.