தொழிலாளிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலாளிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடத்தாம்பட்டியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 50), தொழிலாளி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ பூச்சி கடித்து விட்டது. இதனால் அவருடைய உடலில் எரிச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வெறுப்படைந்த தீர்த்தகிரி நேற்று முன்தினம் விஷம் குடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொரம்பட்டியை சேர்ந்வர் பெருமாள் (35), தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com