

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள் ஏலம் விடப்படுகிறது. இந்த சங்கத்திற்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3,800 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் சேலம், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டு மஞ்சளை ஏலம் எடுத்தனர். இந்த விற்பனை சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. மஞ்சள் விரலி ரூ.6,109 முதல் 9,101 வரை ஏலம் குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ.5,812 முதல் 7,869 வரையிலும் விற்பனையானது.