அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்

அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.
அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3,015 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, கோவை, பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர். நேற்று முதல் நாளில் ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் ஏலம் தொடங்கிய முதல் நாளிலேயே கூடுதல் விலைக்கு மஞ்சள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com