மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுப்பு; இளம்பெண் கோடரியால் வெட்டி படுகொலை

ராய்ச்சூர் அருகே மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்து வந்த இளம்பெண்ணை அவரது அண்ணன் கோடரியால் வெட்டிக்கொன்றார். நாளை (செவ்வாய்க்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுப்பு; இளம்பெண் கோடரியால் வெட்டி படுகொலை
Published on

பெங்களூரு: ராய்ச்சூர் அருகே மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்து வந்த இளம்பெண்ணை அவரது அண்ணன் கோடரியால் வெட்டிக்கொன்றார். நாளை (செவ்வாய்க்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக...

ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 22). இவரது அண்ணன் ஷியாம் சுந்தர் (28). இந்த நிலையில் சந்திரகலாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்திருந்தனர். மேலும் அவருக்கு நாளை (13-ந்தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் மாப்பிளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு சந்திரகலா மறுத்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் பெற்றோர், சகோதரர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.

திருமணத்திற்கு மறுப்பு

திருமண நாள் நெருங்கி வந்ததால் சந்திரகலாவின் வீட்டில் பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். திருமணத்திற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் சந்திரகலா மாப்பிள்ளை கருப்பாக உள்ளார். எனவே தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவரது அண்ணன் ஷியாம் சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அண்ணன்-தங்கை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வெட்டிக்கொலை

அப்போது ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் கோடரியால் சந்திரகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

சமபவம் பற்றி தகவல் அறிந்ததும் கப்பூர் போலீசார் விரைந்து வந்து, கொலையான சந்திரகலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேவதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கைது

போலீஸ் விசாரணையில், தன்னை திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளை கருப்பாக இருந்ததால் திருமணத்திற்கு சந்திரகலா மறுத்ததும், இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் அவரை கோடரியால் வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம் சுந்தரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணத்திற்கு மறுத்த தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com