நாகரசம்பட்டி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை

நாகரசம்பட்டி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
நாகரசம்பட்டி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மணிகாட்டியூரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சுகுணா (வயது 25). இவர்கள் நாகரசம்பட்டி அருகே உள்ள நயினாம்பாறை பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2-வது பெண் குழந்தை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் பிறந்தது.

இந்தநிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த சுகுணா, கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகுணா இறந்தார். இளம்பெண் தற்கொலை குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com