

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தூத்தூர் அருகே உள்ள தேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரஞ்சித்(வயது 20). இவர், திருவையாறில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்த ரஞ்சித், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சிறுமியின் குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்தை கைது செய்தார். மேலும் ரஞ்சித்தின் பெற்றோர் முருகேசன், சுதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.