

ஊட்டி,
ஊட்டி அருகே நரிக்குழி மந்து பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது மகன் பூவரசன் (வயது 27). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவர் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.