தந்தையை தாக்கிய வாலிபர் கைது

நெல்லையில் தந்தையை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தந்தையை தாக்கிய வாலிபர் கைது
Published on

நெல்லை:

நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் சக்திவேல் (வயது 23). சம்பவத்தன்று இவர் குடும்ப தகராறு காரணமாக தந்தையை தாக்கியுள்ளார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை நேற்று கைது செய்தனர்.

இதேபோல் தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற பேய் முருகன் (31). இவர் பேட்டையை சேர்ந்த மகேஷ் கண்ணன் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com