காரமடை அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

காரமடை அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரமடை அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
Published on

காரமடை,

காரமடை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (வயது 58) கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார்.

அப்போது காந்தி நகர் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயற்சி செய்தனர்.

அப்போது விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தனது ஒரு தங்க நகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இருப்பினும் அந்த வாலிபர்கள் மற்றொரு 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த வாலிபர்கள் பற்றிய தகவல் கிடைத்தது.

இதற்கிடையில் காரமடை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவர்கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 25) என்பதும், அவரும் நண்பரும் சேர்ந்து விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து காரமடை போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து தங்க நகையை மீட்டனர். மேலும் நண்பரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com