மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

நாகூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Published on

நாகூர்:

நாகூர் கால்மாட்டு தெருவை சேர்ந்த செய்யது முகமது ஜுபைர் மவுலானா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி இரவு தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை நாகூர் போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் (வயது 20) என்பதும், அவர் ஓட்டி வந்தது செய்யது முகமது ஜுபைர் மவுலானாவின் மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com