

சிவகிரி:
சிவகிரி அருகே தென்மலையை சேர்ந்த அர்ச்சுனன் மகன் பாண்டி என்ற கருமலைபாண்டி (வயது 30). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்க எடுக்க, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மனோகரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கருமலை பாண்டியை கைது செய்தார். பின்னர் அதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.