மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

பாப்பாக்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
Published on

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே உள்ள ஓடக்கரை துலுக்கப்பட்டியில் நாராயணசாமி கோவில் கிணற்றுக்கு அருகில் உள்ள தொட்டிக்கு கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது. நேற்று இரவு அப்பகுதிக்கு சென்ற நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை ஒளிவு மகன் சதீஷ் கோபி (வயது 17) அங்குள்ள குழாயில் கை வைத்தார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி தண்ணீர் தாட்டிக்குள் தலைகீழாக விழுந்தபடி கிடந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சதீஷ் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்மோட்டார் ஒயர் குழாயில் உரசியபடி கிடந்ததாகவும், அதனால் குழாயை தொட்ட சதீஷ் கோபி மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com