தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த மேல் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தார். வலி தாங்க முடியாமல் அவர் சம்பவத்தன்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி மற்றும் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணனின் மனைவி சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com