ஜிஎஸ்டி: சத்திஸ்கர் சரக்கு போக்குவரத்து மையமாக இருக்கும் வாய்ப்பு - அருண் ஜெட்லி

ஜிஎஸ்டி அமலாகிய பின்னர் சத்திஸ்கர் மாநிலம் சரக்கு போக்குவரத்து மையமாக மாறும் வாய்ப்பிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
Published on

ராய்ப்பூர்

சத்திஸ்கர் மாநிலம் இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ளதால், புவியியல் ரீதியிலான இந்த சாதகமான அம்சத்தைப் பயன்படுத்தி நுகர்வு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இங்கு தங்களது கிடங்குகளை அமைக்க முடியும் என்றார் ஜெட்லி.

அவர் மேலும் கூறுகையில் சர்தார் படேலின் முயற்சியால் அரசியல் ரீதியில் தேசம் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கப்படவில்லை. கடந்த 70 வருடங்களில் வரி கட்டுவதற்கு ஏற்ற சூழல் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார், இந்த வரி அமைப்பு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவை மேலும் முன்னேற வைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர் இது வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

விழாவில் பேசிய மாநில முதல்வர் ராமன் சிங் பொருளாதார சுதந்திரத்தை ஜிஎஸ்டி அமலாக்கம் ஏற்படுத்தியுள்ளது; அது நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க உதவும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com