தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை சாவு

தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை மர்மமாக இறந்தது.
Published on

கரூர்

தாய்ப்பால் குடித்த குழந்தை

கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவருடைய மகள் ஸ்ரீதனுஷா (வயது 21). இவரது மகள் தருணிகா (1).

இந்தநிலையில் ஸ்ரீதனுஷா நேற்று முன்தினம் காலை தனது குழந்தை தருணிகாவுக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பிறகு மதியம் குழந்தையை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதனுஷா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தை தருணிகாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து குழந்தை எப்படி இறந்தது என தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தாய்ப்பால் குடித்த 1 வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com