புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா

சீனா தனது புதிய செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
Published on

டையுவான்,

சீனா, ஜிலின்-1 வரிசை செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது ஜிலின்-2 காவோபென் 02பி என்ற செயற்கைகோளை உருவாக்கியது.

சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டதாகும்.

இந்த செயற்கைகோளை கே இசட்-1 ஏ ராக்கெட் மூலம் சான்சி மாகாணத்தில் உள்ள டையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு சீனா விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

ஏற்கனவே விண்வெளியில் உள்ள ஜிலின்-1 செயற்கைகோள்களுடன் இந்த செயற்கைகோளும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொலைநிலை உணர் திறன் தரவு மற்றும் சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com