சீனா ராணுவம் சாராத 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா ராணுவம் சாராத 3 செயற்கைக்கோள்களை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
Published on

*ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள தாக்கர் மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அங்குள்ள ஒரு சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

*குவைத் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று அங்கு ஒரே நாளில் 684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

*பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும் இவர்கள் 2 நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* சீனா ராணுவம் சாராத 3 செயற்கைக்கோள்களை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள்கள் இயற்கை வள ஆராய்ச்சி புவியியல் ஆராய்ச்சி மற்றும் இணைய பயன்பாட்டடின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் என சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது.

* வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,500 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு மொத்த பாதிப்பு 2 லட்சத்து 21 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அங்கு பலி எண்ணிக்கை 2, 874 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்க அதிகாரிகள் அந்த தூதரகத்துக்குள் நுழைந்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com