சீன அதிபர் ஜின்பிங் அரசு முறை பயணமாக மியான்மர் நாட்டுக்கு செல்கிறார்

சீன அதிபர் ஜின்பிங் மியான்மர் நாட்டுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் அரசு முறை பயணமாக மியான்மர் நாட்டுக்கு செல்கிறார்
Published on


* இங்கிலாந்தின் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அறிவித்தனர். அதனை தொடர்ந்து, இளவரசி மேகன் இங்கிலாந்தில் இருந்து கனடாவுக்கு திரும்பினார். இது அரச குடும்பத்தில் புயலை கிளப்பி உள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பதவி நீக்க தீர்மானத்தை விரைவில் செனட் சபைக்கு அனுப்பி வைப்பேன் என பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சிபெலோசி தெரிவித்துள்ளார்.

* சீன அதிபர் ஜின்பிங் வருகிற 17, 18 தேதிகளில் மியான்மர் நாட்டுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மர் அதிபரின் அழைப்பின் பேரில் ஜின்பிங் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* மாலி நாட்டின் வடக்கு பகுதியில் கிடால் பிராந்தியத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படையினரின் முகாம் மீது பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அமைதிப்படை வீரர்கள் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள குல்பன் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

* அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நீடிப்பதால் ஈரான் நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என தங்கள் நாட்டு மக்களை இங்கிலாந்து அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com