

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுவரை 5 நாடுகளை சேர்ந்த 19 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 15 ஆயிரத்து 36 பேர் ஆவர்.
பாகிஸ்தானை சேர்ந்த 2 ஆயிரத்து 935 பேருக்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 914 பேருக்கும், இலங்கையை சேர்ந்த 113 பேருக்கும், மியான்மரை சேர்ந்த ஒருவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.